UA-201587855-1 Tamil369news மோர்கன், சவுதியுடன் தனிப்பட்ட மோதல் ஏதுமில்லை; விளம்பரத்தை விரும்புபவர்கள் அவ்வாறு நடந்து கொண்டார்கள்: அஸ்வின் விளக்கம்

மோர்கன், சவுதியுடன் தனிப்பட்ட மோதல் ஏதுமில்லை; விளம்பரத்தை விரும்புபவர்கள் அவ்வாறு நடந்து கொண்டார்கள்: அஸ்வின் விளக்கம்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் மோர்கன், டிம் சவுதியுடன் எனக்கு எந்த மோதலும் இல்லை. விளம்பரத்தை விரும்புபவர்கள்தான் அவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்று டெல்லி கேபிடல்ஸ் அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

ஷார்ஜாவில் கடந்த வாரம் டெல்லி கேபிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் நடந்தது. இதில் டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பேட் செய்தது. கொல்கத்தா வீரர் வெங்கடேஷ் வீசிய 19-வது ஓவரின் கடைசிப் பந்தை ரிஷப் பந்த் எதிர்கொண்டார். பந்த் தட்டிவிட்டு ஒரு ரன் எடுக்க ஓடும்போது, திரிபாதி ஃபீல்டிங் செய்து பந்தை எறிய அது ரிஷப் பந்த்தின் உடலில் பட்டுச் சென்றது. இதைப் பார்த்த அஸ்வின் 2-வது ரன் ஓடினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை