UA-201587855-1 Tamil369news இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரர்: தமிழகத்தின் குகேஷ் சாதனை

இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரர்: தமிழகத்தின் குகேஷ் சாதனை

சென்னை: இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரர் ஆகியுள்ளார் தமிழகத்தை சேர்ந்த குகேஷ். சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தரவரிசை பட்டியலில் (லைவ் ரேட்டிங்) இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்தை அவர் முந்தியதன் மூலம் இந்த சாதனையை படைத்துள்ளார்.

உலக தரவரிசை பட்டியலில் 2755.9 ரேட்டிங் உடன் தற்போது 9-வது இடத்தில் உள்ளார். இது லைவ் ரேட்டிங் ஆகும். விஸ்வநாதன் ஆனந்த் 2754.0 ரேட்டிங் உடன் உள்ளார். குகேஷுக்கு விஸ்வநாதன் ஆனந்த் தான் ரோல் மாடல் என்பது குறிப்பிடத்தக்கது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை