பொங்கல் (Pongal) என்பது தமிழ்நாட்டின் அறுவடை திருவிழா, இது தென்னிந்தியாவின் சிறந்த பண்டிகையாகும்.
பொங்கல் விழா கடவுளுக்கு நன்றி செலுத்தும் விழாவாக கொண்டாடப்படுகிறது,
நாம் அனைவரும் அறிந்தபடி, எந்தவொரு விவசாயிக்கும் அறுவடை செய்வது அவரது கடின உழைப்பின் மிகப்பெரிய பகுதியாகும். அவர் தனது கால்நடைகளுடன் ஆண்டு முழுவதும் உழைக்கிறார், மழை மற்றும் சூரியனைப் பொறுத்து இரவும் பகலும் உழைக்கிறார். எனவே, கடவுளுக்கு நன்றி தெரிவிப்பதற்கான ஒரு குறிப்பாக, பொங்கல் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி நடுப்பகுதியில் கொண்டாடப்படுகிறது.
பொங்கல் உத்தராயணத்தின் ஆரம்பம் என்று நம்பப்படுகிறது - கடவுள் அவர்களுக்கு அமைதி, மகிழ்ச்சி, செழிப்பு, பிரகாசம் மற்றும் நல்லிணக்கத்தை கொடுப்பார். இந்த 4 நாட்களில், குடும்பங்கள் கூடி தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கின்றன.
பொங்கல் (Pongal) கொண்டாட்டங்களின் 4 நாட்கள் பின்வருமாறு: போகிப் பண்டிகை (Boogi) உழவர் திருநாள் / தைப் பொங்கல் (Thai Pongal) மாட்டுப்பொங்கல் (Mattu Pongal) காணும் பொங்கல் / பூ பொங்கல் (Kanum Pongal)
பொங்கல் தொடங்குவதற்கு முன்பு வீடுகள் சுத்தம் செய்யப்பட்டு, வர்ணம் பூசப்பட்டு அலங்கரிக்கப்படுகின்றன.
போகி (Boogi) :
பேகி தினமானது மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று கொண்டாடப்படுகிறது, போகிப் பண்டிகையின் சிறப்பு : “பழையன கழிதலும் புதிய புகுதலும்” என்பதாகும்,
அக்காலத்தில் பழந்துயரங்களை அழிப்பதான இப்பண்டிகையைப் ‘போக்கி’ என்றனர். அந்தச் சொல்லே நாளடைவில் மருவி ‘போகி’ என்றாகிவிட்டது.
மழை பொழிய வைக்கும் கடவுள், வருணன் அவனுக்கு அரசனாகத் திகழ்ந்து இயக்குபவன் இந்திரன். இந்திரனுக்கு ‘போகி’ என்றொரு பெயர் உண்டு. எனவே இந்நாள், ‘இந்திர விழாவாகவும்’ இருந்திருக்கக்கூடும்.
மழை பெய்தால்தான் பயிர்கள் செழிக்கும்! உயிர்கள் வாழும்! எனவே பண்டைய நாட்களில் வருணனின் அரசனான இந்திரனை ‘போகி’ அன்று பூஜிக்கும் வழக்கமிருந்தது. இதனால்தான் பொங்கல் விழாவில் முக்கிய அம்சமாக இந்திரனுக்கு பிடித்த கரும்பை நினைவு கூரும் விதமாக கரும்பு பிரதான இடத்தைப் பிடித்துள்ளது.
தைப் பொங்கல் / உழவர் திருநாள் / சூரிய பொங்கல் (Thai Pongal) :
தை முதல் நாள் பொங்கல் என்றும் அழைக்கப்படுகிறது. மக்கள் பொங்கலை சூரிய கடவுளுக்கு வழங்குகிறார்கள் நாம் கொண்டாடுகிற அனைத்துப் பண்டிகைகளிலும் உணவுக்கும் படையலுக்கும் முக்கியத்துவம் உள்ளது. என்றாலும் உணவுக்கு மரியாதை செய்யும் விழாவாகக் கொண்டாடப்படுகிறது பொங்கல் திருநாள்.
விவசாயிகள் தம் நிலத்தில் விளைந்த புதுநெல்லை குத்தி எடுத்த பச்சரியை, புதுப்பானையில் பொங்கலிட்டு, கழனியில் விளைந்த இஞ்சி, மஞ்சள், கிழங்கு வகைகளை கரும்புடன் சோ்த்து கட்டிய பொங்கல் பானையை அடுப்பில் ஏற்றி பொங்கல் செய்வார்கள். பானையிலிருந்து பால் பொங்கிடும்போது `பொங்கலோ பொங்கல்’ என்று வீட்டில் உள்ள அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து உரக்கச் சொல்வார்கள்.
பொங்கல் தயார் ஆனதும் அவரவர் வழக்கப்படி கதிரவனை வணங்கி பூஜை செய்து, நன்றி தெரிவிக்கும் திருநாளே பொங்கல் திருநாள். எளிமையும், உயிரோட்டமும் நிறைந்த இந்த பண்டிகை ஒவ்வொரு கிராமப்பகுதியிலும் ஒவ்வொரு விதமாக கொண்டாடப்படுகிறது.
மாட்டு பொங்கல் (Mattu Pongal) :
தை மாதம் இரண்டாம் நாள் மாட்டுப் பொங்கல் இதனை திருவள்ளுவர் நாள் என்றும் சொல்வார்கள் இந்த நாளில், விவசாயி ஒரு புதிய அறுவடை மகிழ்ச்சியை உணவு மற்றும் இனிப்புகள் வடிவில் பகிர்ந்து வெளிப்படுத்துகிறார்.
பயிர் உற்பத்தியில் மனிதனுடன் இணைந்து, மனிதனை விட அதிகப்படியான உழைப்பைத் தரும் அக்கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் நாளே மாட்டுப் பொங்கல் தினமாகும்.
பசுவின் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்களும் உறைவதாக ஐதீகம். எனவே பசுவை வணங்குவதன் மூலம், அனைத்து தேவர்களின் ஆசிகளும் நமக்குக் கிடைக்கின்றன. மாட்டுப் பொங்கலன்று பசுக்களுக்கு மஞ்சள் பூசி, திருநீறிட்டு, குங்குமம் வைத்து, மாலை போட்டு, கொம்புகளுக்கு வண்ணமடித்து அவற்றுக்கு படையல் இட்டு வணங்குவார்கள். கிராமப் புறங்களில் இம்மாட்டுப் பொங்கலை பட்டிப் பொங்கல் என்றும் அழைப்பர்.
தமிழ்நாட்டில் பிறந்த திருவள்ளுவர் தமது திருக்குறளின் மூலம், தமிழின் பெருமையையும், தமிழர்களின் பெருமையையும் உலகிற்கு தெளிவாக என்றும் அழியாத வகையில் வெளிப்படுத்தியுள்ளதால், இந்த நாளை திருவள்ளுவர் தினமாகவும் கொண்டாடுகின்றோம்.
(மாட்டுப் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக சல்லிக்கட்டு எனும் வீர விளையாட்டு நிகழ்த்தப்படுகிறது.)
காணும் பொங்கல் (Kanum Pongal) :
பொங்கல் கொண்டாட்டத்தின் கடைசி நாள் நிகழ்வு காணும் பொங்கல். இந்த நாள் தை மாதம் மூன்றாம் நாள் கொண்டாடப்படுகிறது.
கனுப்பொங்கல் அன்று காலை நீராடி, வெறும் வயிற்றுடன், வெட்ட வெளியில் சூரியக் கோலமிட்டு, அதில் பொங்கல், கரும்பு போன்றவற்றை வைத்து, ஆதவனுக்கு படைப்பார்கள்.
இந்த நாட்களில் மக்கள் புதிய ஆடைகளை அணிந்துகொள்கிறார்கள், எல்லாவற்றையும் மறந்து வெறுமனே மகிழ்ச்சியடைய வேண்டிய நேரம் இது என்று அவர்கள் நம்புகிறார்கள். தென்னிந்தியாவில் இது ஒரு நீண்ட மற்றும் மிகவும் பிரபலமான பண்டிகை என்பதால் பலர் தங்கள் குடும்பத்தினா்களுடன் கூடி சந்திக்கிறார்கள். தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கின்றன.
இந்த நாளன்று உறவினர்கள், நண்பர்களின் வீடுகளுக்கு செல்வது மற்றும் பெரியவர்களிடம் ஆசிர்வாதம் பெறுவது போன்றவை அடங்கும். அதுமட்டுமின்றி இந்த நாளன்று தமிழர்களின் வீர விளையாட்டுக்கள் பலவும் நடைபெறும், முக்கியமாக இந்த நாளானது பெண்களுக்குரியது. ஏனெனில் இந்த நாளில் பெண்கள் பொங்கல் பானையில் கட்டியிருக்கும் மஞ்சள் கொத்தினை, முதிர்ந்த சுமங்கலிகள் ஐந்து பேரின் கையில் கொடுத்து வாங்கி, அதனை முகம் மற்றும் உடலில் பூசுவார்கள்.
இது பொதுவாக இந்தியாவிலேயே கொண்டாடப்படுகிறது.