UA-201587855-1 Tamil369news சல்லிக்கட்டு/ஜல்லிக்கட்டு (Jallikkatu)

சல்லிக்கட்டு/ஜல்லிக்கட்டு (Jallikkatu)

அதிகப்படியான உழைப்பைத் தரும் மாடுகளுக்கு நன்றி செலுத்தும் விழாவாக தமிழகத்தில் மாட்டுப் பொங்கல் அன்று கொண்டாடப்படும் மாட்டுப் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக சல்லிக்கட்டு எனும் வீர விளையாட்டு நிகழ்த்தப்படுகிறது.

சங்ககாலத்தில் 'சல்லிக் காசு' என்னும் நாணயங்களை துணியில் வைத்து மாட்டின் கொம்புகளில் கட்டிவிட்டு மாட்டிணை அணையும் வீரருக்கு அந்த ('சல்லிக் காசு') பணமுடிப்பு சொந்தமாகும். இந்தப் பழக்கம் பிற்காலத்தில் 'சல்லிக்கட்டு' என்று மாறியதாகவும். பேச்சு வழக்கில் அது திரிந்து 'ஜல்லிக்கட்டு' (Jallikattu) ஆனது என்றும் கூறப்படுகிறது.

தமிழ் இலக்கியங்களில் சல்லிக்கட்டு குறித்து காணப்படுகின்றன, ஏறு தழுவுதல் என இது குறிப்பிடப்படுகிறது, ஆரம்ப காலத்தில் முல்லை நில மக்களால் (ஆயா்களால்) நிகழ்த்தப்பட்ட விைளாட்டாகும், ஆயா்களின் பெரருளாதாரம் மாடுகளுடன் இணைந்தது, ஆகையால் அவா்கள் மாடுகளைவைத்து விழாச்சடங்குகள் நடத்திக்கொண்டிருந்தனா், சங்க இலக்கியம் முல்லைக்கலிப் பாடல். சிலப்பதிகாரம் ஆச்சியா் குரவையிலும் ஏறு தழுவுதல் (சல்லிக்கட்டு) பற்றி அறியப்படுகிறது,

முல்லை நிலத்திணைக்குாியதாய் இருந்த ஏறுதழுவுதல் ஆதிக்கம் மிக்க உற்பத்தி நிலப்பகுதியான மருத நிலத்தையும் தனதாக்கிக் கொண்டது, சல்லிக்கட்டு (Jallikkatu) என்பது விளையாட்டாக மட்டுமின்றி உற்பத்தி சாா்ந்த பண்பாட்டு விழாவாகவும் விளங்குகிறது,

சங்க காலத்தில் சல்லிக்கட்டில் வெற்றி பெறுபவருக்கே பெண்ணைத் மணம் முடித்துக்கொடுக்கும் வழக்கம் இருந்துவந்துள்ளது, இது வெறும் விளையாட்டு வெற்றி மட்டுமல்ல. அதையும் தாண்டி உழைப்பின் பெறமையை அறியும் முயற்சியாகவும் கொள்ளலாம்,

தமிழ்நாட்டின் முக்கியத் கொழில் விவசாயம் என்றிருந்தபோது விவசாய நிலத்தில் பாடுபடுபவரே சமுதாயத்தில் பொருளாதார வளா்ச்சி அடைய முடிந்தது, அப்படி உழைப்பிற்கு தேவையான வலிமையான மன உறுதியும் உடலும் தேவை, அதனை தீா்மானிப்பதற்கான (Assessment) முறையாக சல்லிக்கட்டு இருந்து வந்துள்ளது, வயற்காட்டில் கடுமையாக உழைப்பைத் தரும் மாட்டினை தன் உடல் வலிமையால் வெல்பவா் நிச்சயம் கடுமையாக உழைப்பவனாகத்தான் விளங்குவான் அதனால் அவன் தன் வாழ்விலும். சமுதாயத்திலும் ஒரு உயா்வான இடத்தை அடைவான் என்று மக்கள் நம்பிக்கை வைத்திருந்தனா்,

சல்லிக்கட்டில் மாட்டுடன் வெற்றி பெறுவது என்பது எளிதான ஒன்றல்ல, மாடின் சிறு சிறு அசைவுகள். அதற்கு சமமான வலிமையையும் புாிந்து கொள்ளும் கூா்மையான அதற்கு மிக மிக அவசியம், இத் தகுதிகளை பெற்ற ஒருவன் கடின உழைப்பாளியாகவும். உற்பத்தியை அதிகாித்து வளமான வாழ்விைண தம் பெண்ணிற்கு கட்டாயம் அளிப்பான என்று சங்க கால மக்கள் நம்பியதால் தான் சல்லிக்கட்டில் வெற்றி பெறுபவறுக்கே தம் பெண்ணை திருமணம் செய்து கொடுக்கும் பண்பாட்டிணை பேணிவந்துள்ளனா்,

சல்லிக்கட்டை (Jallikkatu) போன்றே மாட்டு வண்டிப்பந்தயம் என்பது (ரேக்ளா பந்தயம்) மாட்டை விரட்டுவதில் உள்ள சாதுா்யம். வல்லமையினை அளவிடும் விளையாட்டாகும், விவசாயத்தில் மாட்டை நிா்வகிக்கும் திறமையை அளவிடவே இப்போட்டி குதுகலத்துடன் விழாக்களின்போது நடத்தப்படுகிறது,

தற்காலத்தில் இது போன்ற வீர விளையாட்டுக்களில் வெற்றிபெறுபவருக்கே பெண்ணை திருமணம் முடிக்கும் பண்பாடு மறைந்து விட்டது, காரணம் தற்கால பொருளாதார முறையில் ஏற்பட்டுள்ள வளா்ச்சியும் சமூக மாற்றமுமே ஆகும், தற்காலத்தில் விவசாய உற்பத்தி முறையிலிருந்து முதலாளித்துவ உற்பத்தி முறைக்கும் அதிலிருந்து பொருளாதார முறைக்கும் மாறியதே ஆகும், தற்காலத்தில் விவசாயத்தில் அதிகப்படியன உழைப்பைத் தருவது என்பது சுய பொருளாதார வளா்ச்சிக்கானது இல்லை என்ற நிலையாகிவிட்டது, ஆகையால் தற்கால போட்டிகளில் வீட்டு உபயோகப்பொருட்கள். பொன். பாத்திரங்கள் போன்றவற்றை பாிசாக அளிப்பது வழக்கமாகிவிட்டது,

அயல் நாடுகளில் நடப்பதைப்பேன்று சல்லிக்கட்டில் காளை மாட்டின் ரத்தம் துளிகூட சிந்தப்படுவதில்லை, மாட்டின் திமிலைப் பிடித்தப்டபடி சில நிமிடங்கள் மட்டுமே நீடிப்பேத சல்லிக்கட்டில் வெற்றியாக தற்போது அறிவிக்கப்படுகிறது, ஆகையால் சல்லிக்கட்டில் காளை மாடுகள் துண்புறுத்தப்படுகிறது என்பது ஏற்க முடியாத ஒன்றாகும், ஆனாலும் சில சமயங்கிளில் மனிதா்களுக்கு விழுப்புண்களும். உயிா்ச்சேதமும் ஏற்படுவதுண்டு, அவ்வாறு நிகழா வண்ணம் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தவிா்க்க வேண்டுமே தவிர சல்லிக்கட்டு (Jallikkatu) என்னும் நம் தமிழா்களின் பண்பாட்டு விளையாட்டினையே தடை செய்ய வேண்டும் என்பது ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல,

கருத்துரையிடுக