UA-201587855-1 Tamil369news டோக்கியோ பாராலிம்பிக்ஸ் கோலாகலமாக தொடங்கியது; 162 நாடுகளைச் சேர்ந்த 4,403 வீரா், வீராங்கனைகள் போட்டிகளில் பங்கேற்பு: இந்திய தேசியக் கொடியை தேக் சந்த் ஏந்திச் சென்றார்

டோக்கியோ பாராலிம்பிக்ஸ் கோலாகலமாக தொடங்கியது; 162 நாடுகளைச் சேர்ந்த 4,403 வீரா், வீராங்கனைகள் போட்டிகளில் பங்கேற்பு: இந்திய தேசியக் கொடியை தேக் சந்த் ஏந்திச் சென்றார்

ஜப்பானின் டோக்கியோ நகரில் பாராலிம்பிக்ஸ் விளையாட்டு கோலாகலமாகத் தொடங்கியது. செப். 5-ம் தேதி வரை நடைபெறும் இந்த விளையாட்டில் 162 நாடுகளைச் சேர்ந்த 4,403 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். இந்தியாவில் இருந்து 54 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது. வண்ணமயமாக நடைபெற்ற தொடக்க விழாவில் இந்திய தேசிய கொடியை ஈட்டி எறிதல் வீரர் தேக் சந்த் ஏந்திச் சென்றார்.

2020-ம் ஆண்டே பாராலிம்பிக் போட்டிகள் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கரோனா பாதிப்பு காரணமாக கோடைகால ஒலிம்பிக் போட்டிகளைப் போலவே பாராலிம்பிக் போட்டியும் ஓராண்டுக்கு தள்ளிவைக்கப்பட்ட நிலையில் நேற்று போட்டிகள் தொடங்கின. பாராலிம்பிக்ஸ் போட்டியை கண்கவர் கலை நிகழ்ச்சிகள், வாண வேடிக்கைகள், லேசர் ஜாலங்களுடன் ஜப்பான் பேரரசர் நருஹிதோ தொடங்கி வைத்தார். அமெரிக்க துணைத் தலைவர் கமலா ஹாரிஸின் கணவர்டக்ளஸ் எம்ஹாஃப், சர்வதேச பாராலிம்பிக் கமிட்டி தலைவர் ஆண்ட்ரூ பார்சன்ஸ் மற்றும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாச்உள்ளிட்டோரும் தொடக்க விழாவில் கலந்து கொண்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை