ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற்று வரும் 32வது ஒலிம்பிக் திருவிழாவில் நேற்று மகளிருக்கான ஹாக்கியில் வெண் கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் இந்திய அணி 3-4 என்ற கோல் கணக்கில் போராடி தோல்வியடைந்தது.
இந்திய அணி சார்பில் குர்ஜித் கவுர் 25, 26-வது நிமிடங்களிலும் வந்தனா கட்டாரியா 29-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். இங்கிலாந்து தரப்பில் எலினா ரேயர் (16-வது நிமிடம்), சாரா ராபர்ட்சன் (24-வது நிமிடம்), ஹோலி பியர்ன் (35-வது நிமிடம்), கிரேஸ் பால்ட்சன் (48-வது நிமிடம்) ஆகியோர் கோல் அடித்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்