UA-201587855-1 Tamil369news ஐபிஎல் தொடரிலிருந்தும் இந்த சீசனோடு ஓய்வு பெறுகிறாரா தோனி?- பிராட் ஹாக் சூசகம்

ஐபிஎல் தொடரிலிருந்தும் இந்த சீசனோடு ஓய்வு பெறுகிறாரா தோனி?- பிராட் ஹாக் சூசகம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது நடந்துவரும் 14-வது ஐபிஎல் சீசனோடு தோனி ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெற வாய்ப்புள்ளது என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு ஐபிஎல் சீசனோடு தோனி ஓய்வு பெற்றுவிடுவார் என்று பல்வேறு ஊகச் செய்திகள் வந்தபோதிலும் அதை சிஎஸ்கே நிர்வாகிகளும், உரிமையாளர்களும் மறுத்து வருகிறார்கள். ஆனால், வதந்திகள் அடங்குவதாக இல்லை. தோனியின் உடல் கட்டுக்கோப்பு, இளைஞர்களுக்கு இணையாகக் களத்தில் விளையாடுதல் போன்றவற்றால் இன்னும் சில ஆண்டுகள் ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என்று சிஎஸ்கே தரப்பு கூறுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை