UA-201587855-1 Tamil369news மும்பை இந்தியன்ஸ் ப்ளே ஆஃப் செல்ல உதவிய ராஜஸ்தான்: இஷான் காட்டடி : நைல், நீஷம் விக்கெட் மழை

மும்பை இந்தியன்ஸ் ப்ளே ஆஃப் செல்ல உதவிய ராஜஸ்தான்: இஷான் காட்டடி : நைல், நீஷம் விக்கெட் மழை


ஜேம்ஸ் நீஷம், நேத்தன் கூல்டர் நைல், பும்ரா ஆகியோரின் பந்துவீச்சு, இஷான் கிஷனின் காட்டடி ஆட்டம் ஆகியவற்றால் துபாயில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியிந் 51-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது நடப்பு சாம்பியன்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணி.

முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் சேர்த்தது. 91 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 8.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 94 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை