UA-201587855-1 Tamil369news 'போலி துப்பாக்கி'யில் குண்டு பாய்ந்து ஒளிப்பதிவாளர் பலி: மிஷன் இம்பாஸிபிள் நடிகர் படப்பிடிப்பில் அதிர்ச்சி

'போலி துப்பாக்கி'யில் குண்டு பாய்ந்து ஒளிப்பதிவாளர் பலி: மிஷன் இம்பாஸிபிள் நடிகர் படப்பிடிப்பில் அதிர்ச்சி

நடிகர் அலெக் பால்ட்வின் நடிப்பில் உருவாகி வரும் 'ரஸ்ட்' என்கிற திரைப்படத்தின் படப்பிடிப்பில் போலி என்று நினைத்த துப்பாக்கியில் இருந்து குண்டு பாய்ந்ததில் படத்தின் ஒளிப்பதிவாளர் பலியானார். இயக்குநர் படுகாயமடைந்தார்.

ஹாலிவுட்டில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் அலெக் பால்ட்வின். இவர் நடித்து, இணைந்து தயாரிக்கும் படம் 'ரஸ்ட்'. இந்தப் படப்பிடிப்பு நியூ மெக்ஸிகோவின், சாண்டா ஃபே பகுதியில் நடைபெற்று வந்தது. இந்த இடத்தில் ஏற்கெனவே பல ஹாலிவுட் திரைப்படப் படப்பிடிப்புகள் நடந்துள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை