UA-201587855-1 Tamil369news 'அன்புசெல்வன்' பட விவகாரம்; தயாரிப்பாளர் விளக்கம்; கௌதம் மேனன் ஏற்க மறுப்பு

'அன்புசெல்வன்' பட விவகாரம்; தயாரிப்பாளர் விளக்கம்; கௌதம் மேனன் ஏற்க மறுப்பு

'அன்புசெல்வன்' பட விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் விளக்கம் அளித்துள்ளார். ஆனால், அதனை கெளதம் மேனன் ஏற்க மறுத்துவிட்டார்.

கெளதம் மேனன் நாயகனாக நடிக்கும் 'அன்புசெல்வன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நவம்பர் 3-ம் தேதி வெளியிடப்பட்டது. இதனை இயக்குநர் பா.இரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இந்த ட்வீட்டை மேற்கோளிட்டு கெளதம் மேனன் தனது ட்விட்டர் பக்கத்தில், "எனக்கே தெரியாமல் நான் நாயகனாக நடித்துள்ள படமா" என்று அதிர்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த ட்வீட் இணையத்தில் வைரலாகப் பரவியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை