UA-201587855-1 Tamil369news இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு

இந்திய அணிக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்பதற்கான 21 பேர் கொண்ட வலுவான அணியை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இந்த வார இறுதியில் தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுரியனில் வரும் 26-ம் தேதி தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் ஜனவரி 3-ம் தேதி ஜோகன்னஸ்பர்க்கிலும், 3-வது டெஸ்ட் ஜனவரி 11-ம் தேதி கேப்டவுனிலும் நடைபெறுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை