UA-201587855-1 Tamil369news பீஸ்ட் படத்தின் 3-வது பாடல் இன்று மாலை வெளியீடு - ஆர்வத்தில் ரசிகர்கள்!

பீஸ்ட் படத்தின் 3-வது பாடல் இன்று மாலை வெளியீடு - ஆர்வத்தில் ரசிகர்கள்!

பீஸ்ட் படத்தின் 3-வது பாடல் இன்று (ஏப்.8) மாலை வெளியிடப்படும் என படக்குழு நேற்று தெரிவித்திருந்தது. முதல் இரண்டு பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், படத்தின் 3-வது பாடலை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் பூஜா ஹெக்டே அபர்ணா தாஸ், யோகிபாபு, ரெடின் கிங்க்ஸ் லி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விஜயின் 65வது படமான இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு படத்தின் முதல் பாடலான 'அரபிக் குத்து' வெளியானது. இந்த பாடலை சிவகார்த்திகேயன் எழுதியிருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை