புனே: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் புனேவில் நடந்த மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இடையேயான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மும்பை அணி 161 ரன்கள் எடுத்தது.
அதைத் தொடர்ந்து 162 ரன்கள் இலக்கை துரத்திய கொல்கத்தா அணி 15 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி 5 ஓவர்களில் 35 ரன்கள் தேவையாக இருந்தது. டேனியல் சேம்ஸ் வீசிய 16-வது ஓவரில் பாட் கம்மின்ஸ் 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் உட்பட 35 ரன்களை விளாச 4 ஓவர்களை மீதம் வைத்து கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. பாட் கம்மின்ஸ் 15 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் விளாசி மிரட்டினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்