UA-201587855-1 Tamil369news 'நான் விஜய்யின் மிகப்பெரிய ரசிகன் - பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் 

'நான் விஜய்யின் மிகப்பெரிய ரசிகன் - பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் 

'நான் நடிகர் விஜய்யின் மிகப்பெரிய ரசிகன்' என பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் தெரிவித்துள்ளார்.

'பீஸ்ட்' மற்றும் கேஜிஎஃப்2 படங்கள் மட்டுமல்ல அவற்றுடன் இணைந்து ஷாகித் கபூர், மிர்னால் தாகூர் நடித்த 'ஜெர்ஸி' படமும் வெளியாகிறது. தெலுங்கில் வெளியான ஜெர்ஸி படத்தின் இந்தி ரீமேக் தான் இந்த படம். தெலுங்கில் படத்தை இயக்கிய கெளதம்தான் இந்தியிலும் இப்படத்தை இயக்குகிறார். இரண்டு மிகப்பெரிய படங்களுக்கு இடையே ஷாகித் கபூரின் ஜெர்ஸி வெளியாகும் நிலையில், ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் பேட்டியளித்துள்ளார். இது தொடர்பாக அவரிடம், ''இரண்டு பெரிய படங்கள் வெளியாக உள்ளன. இந்த பாக்ஸ் ஆபிஸ் மோதல் உங்களுக்கு கவலையளிக்கிறதா?' என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஷாகித் கபூர், ''படத்தை ரீலிஸ் செய்வதற்கான உகந்த நேரம் இது என்பதால் படத்தை வெளியிடுகிறோம். அவர்களும் அதையே சிந்தித்திருப்பார்கள். இரண்டு படங்கள் வெளியானாலும், மற்றொரு படத்திற்கு இடம் இருக்கும்'' என்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை