UA-201587855-1 Tamil369news IPL 2022 | தினேஷ் கார்த்திக் - ஷாபாஸ் அகமது இணை அசத்தல்: த்ரில் ஆட்டத்தில் ராஜஸ்தானை வீழ்த்திய பெங்களூரு

IPL 2022 | தினேஷ் கார்த்திக் - ஷாபாஸ் அகமது இணை அசத்தல்: த்ரில் ஆட்டத்தில் ராஜஸ்தானை வீழ்த்திய பெங்களூரு

மும்பை: மும்பையில் நடந்த ஐபிஎல் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

170 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு அனுஜ் ராவத் மற்றும் டு பிளஸிஸ் கூட்டணி இந்தமுறை சுமாரான துவக்கம் கொடுத்தது. பவர் பிளே தாண்டி நீட்டித்த இவர்கள் 55 ரன்கள் பார்ட்னர்ஷிப்பில் மூலமாக எடுத்தனர். 7வது ஓவரில் 29 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்தார் டு பிளஸிஸ். வேகப்பந்து வீச்சாளர்கள் முயன்றும் இந்தக் கூட்டங்கியை பிரிக்க முடியாத நிலையில் யுஸ்வேந்திரா சஹால் வந்தே இந்தக் கூட்டணியை பிரித்தார். அடுத்த ஓவரிலேயே சைனி அனுஜ் ராவத் 26 ரன்களில் வெளியேற்ற ஆட்டம் ராஜஸ்தான் பக்கம் சென்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை