UA-201587855-1 Tamil369news மருத்துவ ஆலோசனையின் படியே ஜடேஜா விடுவிக்கப்பட்டுள்ளார்; வேறெதுவும் இல்லை - சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன்

மருத்துவ ஆலோசனையின் படியே ஜடேஜா விடுவிக்கப்பட்டுள்ளார்; வேறெதுவும் இல்லை - சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன்

மும்பை: "மருத்துவ ஆலோசனையின் படியே ஜடேஜா விடுவிக்கப்பட்டுள்ளார். மற்றபடி வேறெதுவும் இல்லை" எனத் தெரிவித்துள்ளார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன்.

நடப்பு ஐபிஎல் சீசனில் எஞ்சியுள்ள போட்டிகளில் விளையாடாமல் விலகியுள்ளார் சிஎஸ்கே ஆல்-ரவுண்டர் ஜடேஜா. இந்த சீசன் தொடங்கிய போது கேப்டனாக நியமிக்கப்பட்டார் அவர். இருந்தாலும் அவரது தலைமையிலான சென்னை அணி வெற்றி பெற தவறியது. அதனால் கேப்டன் பொறுப்பை தோனி வசம் ஒப்படைத்தார். பின்னர் அணியில் வீரராக விளையாடினார். கடந்த போட்டியை காயம் காரணமாக மிஸ் செய்தார். இப்போது அந்த காயத்தால் தொடரை விட்டு விலகி உள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை