UA-201587855-1 Tamil369news பாடல் வெளியீட்டு விழாவில் மைக்கை தூக்கி எறிந்தது ஏன் - பார்த்திபன் விளக்கம்

பாடல் வெளியீட்டு விழாவில் மைக்கை தூக்கி எறிந்தது ஏன் - பார்த்திபன் விளக்கம்

பார்த்திபன் இயக்கத்தில் உருவான `இரவின் நிழல்’ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இதில், படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்துகொண்டு, முதல் பாடலை வெளியிட்டார். நிகழ்வின்போது மைக் சரியாக வேலைச் செய்யவில்லை என பார்த்திபன் வேகமாக மைக்கை முன்வரிசையில் தூக்கி வீசியெறிந்ததால் நிகழ்வில் சில நொடிகள் பரபரப்பு ஏற்பட்டது.

இதனைத்தொடர்ந்து பார்த்திபன் தன் செயலுக்கு மன்னிப்பு கேட்டார். மைக் வேலை செய்யாததால் கோபம் அடைந்துவிட்டேன். இது நிச்சயம் அநாகரிகமான செயல். என்னை மன்னிக்கவும் என்று அவர் பேசினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை