UA-201587855-1 Tamil369news IPL 2022 | 'லார்டு' ஷர்துலின் சிறப்பான பந்துவீச்சு - பஞ்சாப்பை வீழ்த்தியது டெல்லி

IPL 2022 | 'லார்டு' ஷர்துலின் சிறப்பான பந்துவீச்சு - பஞ்சாப்பை வீழ்த்தியது டெல்லி

மும்பை: ஐபிஎல் 64வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியை 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி கேபிட்டல்ஸ் அணி வெற்றிபெற்றுள்ளது.

இன்றைய போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய டெல்லி அணிக்கு இன்றும் ஆல் ரவுண்டர் மிட்சேல் மார்ஷ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உதவினார். அவர் அரைசதம் கடந்து 63 ரன்கள் எடுத்து பங்களிப்பு செய்தார். அவருக்கு பக்க துணையாக சர்ப்ராஸ் கான் 32 ரன்களும், லலித் யாதவ் 24 ரன்களும் சேர்க்க டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் சேர்த்தது. பஞ்சாப் தரப்பில் லிவிங்ஸ்டோன் மற்றும் அர்ஷதீப் சிங் தலா மூன்று விக்கெட்கள் வீழ்த்தினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை