UA-201587855-1 Tamil369news டெஸ்ட் கிரிக்கெட்டில் 10000 ரன்களை கடந்த ஜோ ரூட்: இங்கிலாந்து அணி வெற்றி

டெஸ்ட் கிரிக்கெட்டில் 10000 ரன்களை கடந்த ஜோ ரூட்: இங்கிலாந்து அணி வெற்றி

லண்டன்: டெஸ்ட் கிரிக்கெட்டில் 10000 ரன்களை கடந்துள்ளார் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஜோ ரூட். நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் சதம் விளாசி அணியையும் வெற்றி பெற செய்துள்ளார் அவர்.

31 வயதான ஜோ ரூட் கடந்த 2012 முதல் இங்கிலாந்து அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை மொத்தம் 118 டெஸ்ட் போட்டிகள் விளையாடி 10,015 ரன்கள் குவித்துள்ளார் அவர். இதில் 26 சதம் மற்றும் 53 அரை சதங்களும் அடங்கும். இங்கிலாந்து அணி சார்பில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்களை கடந்த இரண்டாவது பேட்ஸ்மேன் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். அவரது இந்த மைல்கல்லை சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்களை கடந்த 14-வது வீரர் ரூட்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை