UA-201587855-1 Tamil369news அதிவேகமாக ஒருநாள் கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பவுலர்: ஷமி சாதனை

அதிவேகமாக ஒருநாள் கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பவுலர்: ஷமி சாதனை

லண்டன்: அதிவேகமாக ஒருநாள் கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பவுலர் என்ற சாதனையை படைத்துள்ளார் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி. இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது அவர் இந்த மைல்கல்லை எட்டியிருந்தார்.

இப்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் பிரதான வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் முகமது ஷமி. 31 வயதான ஷமி இந்திய அணிக்காக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என சர்வதேச கிரிக்கெட் களத்தில் விளையாடி வருகிறார். இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் மொத்தம் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார் ஷமி.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை