UA-201587855-1 Tamil369news 2022 மகளிர் ஹாக்கி உலகக் கோப்பை | இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியை சமன் செய்த இந்தியா

2022 மகளிர் ஹாக்கி உலகக் கோப்பை | இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியை சமன் செய்த இந்தியா

ஆம்ஸ்டெல்வீன்: இந்திய மகளிர் ஹாக்கி அணி இங்கிலாந்துக்கு எதிரான 2022 மகளிர் ஹாக்கி உலகக் கோப்பை குரூப் சுற்று போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் சமன் செய்துள்ளது. இதன் மூலம் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.

15-வது மகளிர் ஹாக்கி உலகக் கோப்பை தொடர் நெதர்லாந்து மற்றும் ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 16 அணிகள் இதில் பங்கேற்று விளையாடி வருகின்றன. கடந்த 1-ஆம் தேதி தொடங்கிய இந்த தொடர் வரும் 17-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்திய அணி ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி ஆட்டத்தை சமனில் நிறைவு செய்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை