“என் மூச்சு இருக்கும் வரை நான் நடித்துக் கொண்டே தான் இருப்பேன்" என்று நாசர் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடிகராக வலம் வருபவர் நடிகர் நாசர். தவிர, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் அசோக் செல்வன் நடிப்பில் வெளியான 'ஹாஸ்டல்' திரைப்படத்தில் அவரது நடிப்பு பலரையும் ஈர்த்தது. தொடர்ந்து 'வாய்தா' படத்தில் வழக்கறிஞராக நடித்திருந்தார். இதனிடையே உடல்நலம் காரணமாக நாசர் சினிமாவை விட்டு விலகப்போவதாக கடந்த சில தினங்களாக தகவல்கள் பரவிவந்தன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்