லண்டன்: நட்சத்திர டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர், ஆல் இங்கிலாந்து கிளப் சார்பில் கொண்டாடப்பட்ட சென்டர் கோர்ட்டின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்றிருந்தார். அந்த விழாவிற்கு அவர் வருகை தரும் படத்தை 'வாத்தி கம்மிங்' என கேப்ஷன் போட்டு தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளது விம்பிள்டன்.
கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்று விம்பிள்டன். இங்கிலாந்து நாட்டில் ஆண்டுதோறும் இந்த விளையாட்டு தொடர் நடைபெற்று வருவது வழக்கம். கடந்த 1877 முதல் விம்பிள்டன் நடத்தப்பட்டு வருகிறது. இதில் 8 முறை ஒற்றையர் ஆடவர் பிரிவில் பட்டம் வென்றுள்ளார் சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ரோஜர் பெடரர். 40 வயதான அவர் 2003, 2004, 2005, 2006, 2007, 2009, 2012, 2017 ஆகிய ஆண்டுகளில் பட்டம் வென்றுள்ளார். அவர் நடப்பு தொடரில் பங்கேற்கவில்லை. வரும் செப்டம்பர் வாக்கில் அவர் விளையாட களம் திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்