UA-201587855-1 Tamil369news 'திருச்சிற்றம்பலம்' ஆடியோ வெளியீட்டு விழா - வீல்சேரில் வந்து கலந்துகொண்ட நித்யா மேனன்

'திருச்சிற்றம்பலம்' ஆடியோ வெளியீட்டு விழா - வீல்சேரில் வந்து கலந்துகொண்ட நித்யா மேனன்

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'திருச்சிற்றம்பலம்'. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படம் குடும்ப உறவுகளை மையப்படுத்திய கதை எனக் கூறப்படுகிறது. 'திருச்சிற்றம்பலம்' படத்தில் பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், ப்ரியா பவானி சங்கர், ராஷி கண்ணா, நித்யா மேனன் உள்ளிட்ட பலர் தனுஷுடன் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் இசையமைப்பாளராக அனிருத் பணிபுரிந்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தனுஷ் உடன் அனிருத் இணைந்திருப்பதால் ஏற்கனவே இந்தப் படத்தின் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

படப்பிடிப்புகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இதையடுத்து படத்தின் ஆடியோ வெளியீடு நேற்று நடைபெற்றது. இதில், நடிகை நித்யா மேனன் வீல் சேரில் வந்து கலந்துகொண்டார். கடந்த ஒரு மாதாகவே, வீல் சேரில் இருந்தபடி இருக்கிறார். கணுக்கால் காயம் காரணமாக, அவரால் நடக்க முடியவில்லை. படியில் இருந்து தவறி விழுந்ததால் கணுக்காலில் எலும்பு முறிவு ஏற்பட, அதன்பிறகு சில நாட்கள் வாக்கிங் ஸ்டிக் உதவியுடன் நடந்துவந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை