UA-201587855-1 Tamil369news திரைப்பட விமர்சகர் கௌசிக் மாரடைப்பால் மரணம்

திரைப்பட விமர்சகர் கௌசிக் மாரடைப்பால் மரணம்

சென்னை: பிரபல தமிழ் சினிமா விமர்சகர் மற்றும் தொகுப்பாளர் கௌசிக் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

தனியார் ஊடகங்களில் பணிபுரிந்துகொண்டிருந்த கௌசிக் சினிமா விமர்சகராகவும், சினிமா டிராக்கராகவும் அறியப்பட்டுவந்தார். ட்விட்டர் போன்ற வலைதளங்கள் மூலம் சினிமா தொடர்பான தகவல்களை வெளியிட்டு ஆக்டிவாக இருந்தார். இதனிடையே, நேற்று மதியம் மாரடைப்பால் உறக்கத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார். அவரின் மரணம் ஊடக துறையிலும் மட்டுமில்லாமல் சினிமாத் துறையிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராகவா லாரன்ஸ், துல்கர் சல்மான், கீர்த்தி சுரேஷ், அதிதி ராவ் ஹைதாரி, வெங்கட் பிரபு உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை