UA-201587855-1 Tamil369news “இன்னும் என் வீட்டில் தான் வாழ்கிறேன்” - வதந்திகளுக்கு நடிகர் மாதவன் விளக்கம்

“இன்னும் என் வீட்டில் தான் வாழ்கிறேன்” - வதந்திகளுக்கு நடிகர் மாதவன் விளக்கம்

ராக்கெட்ரி படத்தில் பணிபுரிந்தவர்கள் அனைவரும் மிகவும் பெருமையுடன் இந்த ஆண்டு அதிக வருமான வரி செலுத்துவார்கள் என்று நடிகர் மாதவன் தெரிவித்துள்ளார்.

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு மாதவன் இயக்கியிருந்த படம் 'ராக்கெட்ரி தி நம்பி விளைவு'. மாதவன் இப்படத்தை இயக்கியதோடு மட்டுமல்லாமல், நம்பி நாராயணனாக அவரே நடித்திருந்தார். இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக மாதவன் அறிமுகமானார். தமிழ், கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி மொழிகளில் ஜூன் 1ம் தேதி இப்படம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இதன் தமிழ்ப் பதிப்பில் சூர்யாவும், இந்திப் பதிப்பில் ஷாருக்கானும் கவுரவ வேடத்தில் நடித்திருந்தனர். வணிக ரீதியாக வும் இந்தப் படம் வெற்றி அடைந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை