UA-201587855-1 Tamil369news CWG 2022 | இந்தியாவுக்கு 12-வது பதக்கம்: வெள்ளி வென்றார் பளுதூக்குதல் வீரர் விகாஸ் தாகூர்

CWG 2022 | இந்தியாவுக்கு 12-வது பதக்கம்: வெள்ளி வென்றார் பளுதூக்குதல் வீரர் விகாஸ் தாகூர்

பர்மிங்கம்: நடப்பு காமன்வெல்த் தொடரில் இந்தியாவுக்கு 12-வது பதக்கம் கிடைத்துள்ளது. பளுதூக்குதல் விளையாட்டு பிரிவில் இந்திய வீரர் விகாஸ் தாகூர் வெள்ளி வென்றதன் மூலம் இது சாத்தியமாகி உள்ளது.

ஆடவருக்கான 96 கிலோ எடை பிரிவில் அவர் பங்கேற்று விளையாடினார். இதில் ஸ்னாட்ச் முறையில் 155 கிலோ எடையும், க்ளீன் அண்ட் ஜெர்க் முறையில் 191 கிலோ எடையையும் அவர் தூக்கி அசத்தினார். மொத்தம் 346 கிலோ எடையை தூக்கியதன் மூலம் இரண்டாம் இடம் பிடித்தார். அதன் மூலம் வெள்ளி வென்றுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை