UA-201587855-1 Tamil369news CWG 2022 | இந்தியாவுக்கு 9வது பதக்கம் - ஜூடோ போட்டியில் அசத்திய சுஷிலா தேவி; பளுதூக்குதலில் சாதித்த ஹர்ஜிந்தர் கவுர்

CWG 2022 | இந்தியாவுக்கு 9வது பதக்கம் - ஜூடோ போட்டியில் அசத்திய சுஷிலா தேவி; பளுதூக்குதலில் சாதித்த ஹர்ஜிந்தர் கவுர்

பர்மிங்காம்: ஜூடோ போட்டியில் இந்தியாவுக்கு இரண்டு பதக்கங்கள் கிடைத்தன. இதன்மூலம் காமன்வெல்த் போட்டித் தொடரில் 9 பதக்கங்களை வென்றுள்ளது இந்தியா.

பெண்களுக்கான ஜூடோ 48 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சுஷிலா தேவி லிக்மாபம் வெள்ளிப் பதக்கம் வென்றார். அரையிறுதியில் மொரீஷியஸின் பிரிசில்லா மொராண்டை வீழ்த்திய சுஷிலா, இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவின் மைக்கேலா வைட்பூயை எதிர்கொண்டார். போட்டியில் பின்தங்கியதால் தங்கப் பதக்கத்தை வெல்லும் வாய்ப்பை நழுவவிட்டவர் வெள்ளிப்பதக்கம் வென்றார். சுஷிலா தேவி, 2014 காமன்வெல்த் தொடரிலும் வெள்ளிப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை