UA-201587855-1 Tamil369news CWG மல்யுத்தம் | இந்தியாவுக்கு இன்று மட்டும் 3 தங்கம் உட்பட 6 பதக்கம் - பாகிஸ்தான் வீரரை வீழ்த்தினார் தீபக் புனியா

CWG மல்யுத்தம் | இந்தியாவுக்கு இன்று மட்டும் 3 தங்கம் உட்பட 6 பதக்கம் - பாகிஸ்தான் வீரரை வீழ்த்தினார் தீபக் புனியா

பர்மிங்கம்: நடப்பு காமன்வெல்த் விளையாட்டுத் தொடரில் இந்திய மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா, தீபக் புனியா, அன்ஷு மாலிக் மற்றும் சாக்‌ஷி மாலிக், திவ்யா கக்ரன் ஆகியோர் அடுத்தடுத்து பதக்கங்களை வென்று வருகின்றனர்.

ஆடவர் ஃப்ரீஸ்டைல் 86 கிலோ பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் தீபக் புனியா பாகிஸ்தானின் முகமது இனாமை எதிர்கொண்டார். இதில், 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார் தீபக் புனியா. இதன்மூலம் தங்கப் பதக்கம் வென்றார். காமன்வெல்த் தொடரில் தீபக் புனியா வெல்லும் முதல் தங்கப்பதக்கம் இதுவாகும். அதேநேரம், இது இந்தியாவுக்கு 9வது தங்கப் பதக்கம் ஆகும். முன்னதாக, ஆடவர் ஃப்ரீஸ்டைல் 65 கிலோ பிரிவில் பஜ்ரங் புனியாவும், மகளிர் ஃப்ரீஸ்டைல் 62 கிலோ பிரிவில் சாக்‌ஷி மாலிக்கும் இன்று தங்கப் பதக்கம் வென்றிருந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை