UA-201587855-1 Tamil369news ஐசிசி டி 20 கிரிக்கெட் தரவரிசையில் 2-வது இடம் பிடித்தார் சூர்யகுமார் யாதவ்

ஐசிசி டி 20 கிரிக்கெட் தரவரிசையில் 2-வது இடம் பிடித்தார் சூர்யகுமார் யாதவ்

துபாய்: ஐசிசி டி 20 கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் 2-வது இடத்தை பிடித்துள்ளார்.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான கடைசி டி 20 ஆட்டத்தில் 36 பந்துகளில் 69 ரன்கள் விளாசிய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு செய்ததன் மூலம் சூர்யகுமார் யாதவ், ஐசிசி தரவரிசையில் ஒரு இடம் முன்னேறி 801 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்துள்ளார். தரவரிசை பட்டியலில் சூர்யகுமார் யாதவ் 2-வது இடத்தை அடைவது இது 2-வது முறையாகும். கடந்த ஆகஸ்ட் மாதமும் அவர், இந்த இடத்தை எட்டியிருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை