UA-201587855-1 Tamil369news ராகவா லாரன்ஸுக்காக மீண்டும் இணையும் 'விக்ரம்' டீம்?

ராகவா லாரன்ஸுக்காக மீண்டும் இணையும் 'விக்ரம்' டீம்?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி,சூர்யா, பஹத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான படம் 'விக்ரம்'. கடந்த ஜூன் மாதம் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் 400 கோடி வசூலை எட்டியது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இப்படத்தில் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து 'மேயாத மான்', 'ஆடை', 'குளுகுளு' போன்ற படங்களை இயக்கிய ரத்ன குமார் எழுத்தாளராக பணியாற்றி இருந்தார்.

லோகேஷ் கனகராஜ் அடுத்து இயக்கவுள்ள விஜய்யின் தளபதி 67 படத்திலும் எழுத்தாளராக பணியாற்றி வருகிறார் இந்த ரத்ன குமார். விஜய் படத்தை முடித்த பிறகு ராகவா லாரன்ஸை வைத்து படம் ஒன்றை இயக்க ரத்ன குமார் திட்டமிட்டு வருகிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை