UA-201587855-1 Tamil369news வெற்றிகரமாக முடிந்த முழங்கால் அறுவை சிகிச்சை - ரவீந்திர ஜடேஜா மீது பிசிசிஐ அதிருப்தி?

வெற்றிகரமாக முடிந்த முழங்கால் அறுவை சிகிச்சை - ரவீந்திர ஜடேஜா மீது பிசிசிஐ அதிருப்தி?

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் ரவீந்திர ஜடேஜாவின் ஆட்டம் இந்திய அணி வெற்றி பெற கைகொடுத்தது. அதைத் தொடர்ந்து ஹாங்காங் அணியுடனான போட்டியில் மிரட்டலான ரன் அவுட் எடுத்து அணிக்கு பக்கபலமாக திகழ்ந்தார். இதனிடையே, வலது காலின் மூட்டு பகுதியில் ஏற்ப்பட்ட காயம் காரணமாக, அவர் நடப்பு ஆசிய கோப்பை தொடரிலிருந்து வெளியேறினார்.

மருத்துவர் கண்காணிப்பிலிருந்ததால் ரவீந்திர ஜடேஜாவுக்கு பதிலாக ஆசிய கோப்பை தொடரில் அக்சர் படேல் இடம் பெற்றார். தொடர்ந்து முழங்கால் அறுவை சிகிச்சை காரணமாக விரைவில் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி20 உலக கோப்பை தொடரில் இருந்தும் ஜடேஜா விலகினார். அவர் சிகிச்சையிலிருந்து மீண்டு பழைய நிலைக்கு திரும்ப குறைந்தது ஆறு மாதங்கள் ஆகலாம் என்பதால் உலகக்கோப்பையில் அவர் பங்கேற்க போவதில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை