UA-201587855-1 Tamil369news இளையராஜாவுடன் இசையிரவு 7 | ‘மன்றம் வந்த தென்றலுக்கு...’ - ஆழ்மனதை மயில் தோகை வருடும் சுகம்!

இளையராஜாவுடன் இசையிரவு 7 | ‘மன்றம் வந்த தென்றலுக்கு...’ - ஆழ்மனதை மயில் தோகை வருடும் சுகம்!

பலரது விருப்பப் பட்டியல்களில் மழைக்கு எப்போதும் தனியிடம் இருப்பதுண்டு. எத்தனை தீவிரமாக இருந்தாலும், வெயிலை எதிர்கொண்டு முன்னேறிச் செல்லும் எவராலும், கொட்டித் தீர்க்கும் மழையின்போது அவ்வாறு செய்ய முடிவதில்லை. உடலை நடுங்கச் செய்திடும் மழை, மனதை எப்போதும் குளிர்விப்பவை. இளையராஜாவின் இசையும் பாடல்களும் இந்த மழைப் போலத்தான், நம் மனங்களில் ஈரத்தை சொட்டிக் கொண்டேயிருக்கச் செய்பவை.

இந்தப் பாடலும் அப்படித்தான், மழை ஓய்ந்த கணமொன்றில் எங்கோ தூரத்தில் கேட்பது போல் தொடங்கி நம் நெஞ்சோடு நெஞ்சாக ஒட்டிக் கொள்ளும் தன்மை கொண்டது. இந்தப் பாடல் இல்லாத இளமைக்கால இரவுகள் சாத்தியமற்றது என்றாலும் அது மிகையாாகது. அந்தளவுக்கு இப்பாடல் எப்போதும் கேட்டாலும், அந்தப் படத்தின் கதைக்கும் நாயகனுக்கும் மத்தியில் நம்மைக் கூட்டிச் சென்றுவிடும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை