UA-201587855-1 Tamil369news ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் கலை இயக்குனர் சந்தானம் காலமானார்

ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் கலை இயக்குனர் சந்தானம் காலமானார்

சென்னை: இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2010 வாக்கில் வெளிவந்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் கலை இயக்குனர் சந்தானம் காலமானார். அவருக்கு வயது 50 என தெரிகிறது. மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக தகவல்.

தமிழ் சினிமாவின் தரமான படைப்புகளில் ஒன்றாக போற்றப்பட்டு வருகிறது ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம். இந்த படத்தில் கலை இயக்குனராக பணியாற்றியவர் தான் சந்தானம். இவர் நடிகர் விஜயின் சர்கார் மற்றும் ரஜினிகாந்தின் தர்பார் போன்ற படங்களிலும் கலை இயக்குனராக பணியாற்றிவயர். இந்நிலையில், அவர் உயிரிழந்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை