UA-201587855-1 Tamil369news காவிக் கொடி, ஜெய் ஸ்ரீராம் முழக்கம்... - பிரபாஸின் ‘ஆதி புருஷ்’ டீசர் எப்படி?

காவிக் கொடி, ஜெய் ஸ்ரீராம் முழக்கம்... - பிரபாஸின் ‘ஆதி புருஷ்’ டீசர் எப்படி?

பிரபாஸ் நடிக்கும் 'ஆதி புருஷ்' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. படம் அடுத்தாண்டு திரைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியில் வெளியான ‘தன்ஹாஜி: தி அன்சங் வாரியர்' என்கிற படத்தை இயக்கி, தேசிய விருது பெற்றவர் ஓம் ராவத். இவரது இயக்கத்தில், ராமாயணக் கதையைத் தழுவி உருவாகிவரும் படம் ‘ஆதி புருஷ்'. இந்தியாவின் பல மொழிகளில் வெளியாகவிருக்கும் இப்படத்தில் கதையின் நாயகனாக ‘பாகுபலி’ புகழ் பிரபாஸும், அவருக்கு ஜோடியாக கீர்த்தி சனோனும் நடித்திருக்கிறார்கள். டி - சீரிஸ்,ரெட்ரோஃபைல்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படம், ஐமேக்ஸ், 3டி முறையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்நிலையில் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை