UA-201587855-1 Tamil369news T20 WC | பெர்த் மைதானத்தில் இன்று பலப்பரீட்சை: தென் ஆப்பிரிக்காவின் வேகத்தை சமாளிக்குமா இந்திய அணி?

T20 WC | பெர்த் மைதானத்தில் இன்று பலப்பரீட்சை: தென் ஆப்பிரிக்காவின் வேகத்தை சமாளிக்குமா இந்திய அணி?

பெர்த்: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பெர்த்தில் இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டமானது பலமான தென் ஆப்பிக்காவின் வேகப்பந்துவீச்சுக்கும், வலுவான இந்திய பேட்டிங் வரிசைக்கும் இடையிலான சிறந்த மோதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில் குரூப் 2-ல் இடம் பெற்றுள்ள இந்திய அணி முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானையும், 2-வது ஆட்டத்தில் நெதர்லாந்தையும் வீழ்த்தியிருந்தது. இதன் மூலம் 4 புள்ளிகளுடன் இந்திய அணி தனது பிரிவில் முதலிடத்தில் உள்ளது. அதேவேளையில் தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே அணிக்கு எதிராக மோதிய முதல் ஆட்டம் மழை காரணமாக பாதியில் கைவிடப்பட்டது. 2-வது ஆட்டத்தில் வங்கதேச அணியை 104 ரன்கள் வித்தியாசத்தில் பந்தாடியிருந்தது. இந்த வெற்றியால் 3 புள்ளிகளுடன் தென் ஆப்பிரிக்கா 2-வது இடத்தில் உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை