UA-201587855-1 Tamil369news டெஸ்ட் கிரிக்கெட்டில் அடுத்த 12 மாதங்கள் எனது கடைசி நாட்களாக இருக்கலாம்: டேவிட் வார்னர் சூசகம்

டெஸ்ட் கிரிக்கெட்டில் அடுத்த 12 மாதங்கள் எனது கடைசி நாட்களாக இருக்கலாம்: டேவிட் வார்னர் சூசகம்

அடுத்து வரும் 12 மாதங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் தான் விளையாடும் கடைசி நாட்களாக இருக்கலாம் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் சூசகமாக தெரிவித்துள்ளார். கிரிக்கெட் அசல் ஃபார்மெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதைதான் அவர் இப்படி சொல்லி உள்ளதாக தெரிகிறது.

36 வயதான வார்னர் கடந்த 2009 முதல் ஆஸ்திரேலிய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். அவர் 2011 வாக்கில் தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுக வீரராக களம் கண்டார். இதுவரை 96 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள வார்னர், 7817 ரன்கள் குவித்துள்ளார். 24 சதம் மற்றும் 34 அரை சதங்கள் இதில் அடங்கும். அதிகபட்சமாக 335 ரன்கள் (நாட்-அவுட்) எடுத்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை