UA-201587855-1 Tamil369news கால்பந்து திருவிழா | இரு சாம்பியன்கள் அங்கம் வகிக்கும் குரூப் இ

கால்பந்து திருவிழா | இரு சாம்பியன்கள் அங்கம் வகிக்கும் குரூப் இ

முன்னாள் சாம்பியன்களான ஸ்பெயின், ஜெர்மனியுடன் பலம் குறைந்த ஜப்பான், கோஸ்டா ரிகா அணிகள் குரூப் இ-ல் இடம் பெற்றுள்ளன. இந்த பிரிவில் இருந்து நாக் அவுட் சுற்றுக்கு ஸ்பெயின், ஜெர்மனி அணிகள் முன்னேறுவதில் பெரிய அளவில் சிக்கல்கள் இருக்க வாய்ப்பு இல்லை.

ஸ்பெயின் - தரவரிசை 7; பயிற்சியாளர் - லூயிஸ் என்ரிக்: ஸ்பெயின் அணி பந்தை அதிக நேரம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் திறமையை இயல்பாகவே கொண்டது. இதுவே அந்த அணிக்கு வரம் என்றும், சாபம் என்றும் நிபுணர்கள் கூறுவது உண்டு. லா ரோஜாஸ் என்ற புனை பெயரை கொண்ட ஸ்பெயின் அணியினர் பந்தை கடத்திச் செல்வதில் அற்புதமாக செயல்படக்கூடியவர்கள். எந்த அணியையும் வீழ்த்தும் திறன் ஸ்பெயினிடம் உள்ளது. அதே நேரத்தில், அவர்களின் அணுகுமுறை பார்ப்பதற்கு சில நேரங்களில் சலிப்பை தரக்கூடும். மேலும் கடைசி நிமிடங்களிலும் பந்தை கடத்திக் கொண்டே செல்லும் உத்தி எதிர்வினையைதரக்கூடும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை