UA-201587855-1 Tamil369news `ரியல் ஹீரோக்களின் கதை' - கேரள பெருவெள்ளத்தை நினைவுபடுத்தும் `2018' டீசர்

`ரியல் ஹீரோக்களின் கதை' - கேரள பெருவெள்ளத்தை நினைவுபடுத்தும் `2018' டீசர்

2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கேரளாவில் வரலாறு காணாத கனமழை பெய்தது. இதன் காரணமாக மாநிலத்தின் 80 அணைகளும் திறக்கப்பட்டன. தொடர் மழையால் மாநிலம் வெள்ளத்தில் மூழ்கியது. கேரளாவின் மொத்த மக்கள் தொகை 3.48 கோடியில், 40 சதவீதம் பேர் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். 483 உயிர்கள் இந்த வெள்ளத்தால் பறிபோயின. பலர் காணாமல் போனார்கள். கேரளத்தின் 14 மாவட்டங்கள் சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டது. ''ஒரு நூற்றாண்டில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளம்' ஆக இது அமைந்தது. 'கடுமையான இயற்கை பேரழிவு' என்று இந்திய அரசு இதை அறிவித்தது.

அந்த பெருமழையானது பல்வேறு காலநிலை மாற்றங்களை உலகுக்கு எச்சரித்த அதேவேளையில் வெள்ளத்தில் சாதி, மதம் கடந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு மனிதாபிமான உதவிகள் செய்யப்பட்டன. இந்த மனிதாபிமான நிகழ்வுகளையும் கேரள பெருவெள்ள துயரையும் நியாபகப்படுத்தும்விதமாக கேரள வெள்ளம் திரைப்படமாக தயாராகியுள்ளது. குஞ்சாகோ போபன், டோவினோ தாமஸ், ஆசிப் அலி, வினீத் ஸ்ரீனிவாசன், அபர்ணா பாலமுரளி, கலையரசன், நரேன், லால், இந்திரன்ஸ், அஜு வர்கீஸ், தன்வி ராம், ஷிவதா, கௌதமி நாயர் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்க நிவின் பாலி மற்றும் நஸ்ரியா நஸிமுக்கு `ஓம் சாந்தி ஒஷானா' படத்தின் மூலம் பிரேக் கொடுத்த இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கியுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை