UA-201587855-1 Tamil369news 2022: ஐஎம்டிபி பிரபல திரைப்படங்கள் பட்டியலில் தென்னிந்திய திரைப்படங்கள் ஆதிக்கம்

2022: ஐஎம்டிபி பிரபல திரைப்படங்கள் பட்டியலில் தென்னிந்திய திரைப்படங்கள் ஆதிக்கம்

2022 இந்தி சினிமாவிற்கு சிறந்த ஆண்டு அல்ல, ஆனால் இந்திய சினிமாவிற்கு, இது நிச்சயமாக நினைவில் கொள்ள வேண்டிய ஆண்டாகும். கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழ் அடங்கிய தென்னிந்திய திரைப்படங்கள் நாடு முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றன. இதன் எதிரொலி, ஐஎம்டிபி பட்டியலில் வெளிப்பட்டுள்ளது.

திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள் குறித்து மக்கள் தங்கள் ரேட்டிங்கை அளிக்கும் வகையிலான வலைதளம் ஐஎம்டிபி. இதில் பொதுமக்களில் யார் வேண்டுமானாலும் தங்கள் கருத்துகளையும் ரேட்டிங்கையும் பதிவு செய்ய முடியும். அந்த வகையில் தற்போது இந்த ஆண்டின் மிகவும் பிரபலமான டாப் 10 இந்தியப் படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது ஐஎம்டிபி. இதில் 8 இடங்களை தென்னிந்திய படங்களே பிடித்துள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை