UA-201587855-1 Tamil369news ஆசியக் கோப்பை ஸ்டேஜ் - 3 வில்வித்தையில் இந்தியாவுக்கு 5 தங்கம்

ஆசியக் கோப்பை ஸ்டேஜ் - 3 வில்வித்தையில் இந்தியாவுக்கு 5 தங்கம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷார்ஜாவில் நடைபெற்று வரும் ஆசியக் கோப்பை ஸ்டேஜ்-3 வில்வித்தைப் போட்டியில் இந்திய ஜூனியர் வீரர், வீராங்கனைகள் 5 தங்கம், 3 வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளனர்.

தனிநபர் மகளிர் பிரிவில் இந்தியாவின் பிரகதி, ஆதித்தி ஸ்வாமி, பர்னீத் கவுர் ஆகியோர் முதல் 3 இடங்களைப் பெற்றனர். காம்பவுண்ட் பிரிவில் இந்தியாவின் பிரியான்ஷ், ஓஜாஸ் டியோடேல் ஆகியோர் முறையே தங்கம், வெள்ளியைக் கைப்பற்றினர். காம்பவுண்ட் அணி பிரிவில் இந்திய ஆடவர், மகளிர் அணியினர் தங்கத்தைக் கைப்பற்றினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை