வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘வாரிசு’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் நடிகர் விஜய் பேசும்போது, "வாய்பு கிடைக்கிறபோதெல்லாம் நன்றி சொல்லி கொண்டே இருக்கணும். என்னை உருவாக்கிய உளிகளுக்கு என் நன்றிகளும் வணக்கங்களும். வம்சி கதையை முதல் முறையே நடிகர்கள் ஓகே பண்ணிடுவாங்க. ஆனா, எந்த டேக்கும் அவர் ஒரு தடவையில் ஓகே சொன்னது இல்ல. அதாவது அவர் தனக்கு வேண்டிய காட்சிகளை கச்சிதமாக எடுப்பார். எஸ்.ஜே.சூர்யா மற்றும் குஷ்புவுக்கு ஸ்பெஷல் நன்றி. சிறிய வேடங்கள் என்றாலும் இந்தப் படத்தில் நடிக்க முன்வந்தனர். எஸ்.ஜே.சூர்யாவின் வளர்ச்சி மகிழ்ச்சியாக உள்ளது. அவருக்கு நிறைய கனவுகள் உள்ளன. விரைவில் அது நிறைவேறும். நடிகர் ஷாம் குஷி படத்தில் இருந்து எனது நண்பர்.
அன்பு தான் உலகத்தை ஜெயிக்க கூடிய ஒரு விஷயம். ரசிகர்களின் அன்பே எனக்கான போதை. அன்பே என்பது உலகின் மிகப்பெரிய ஆயுதம். விஜய் மக்கள் இயக்கம் ரத்த தானம் செய்வது பெருமையாக இருக்கிறது. எனது ரசிகர்களின் இரத்த தானம் பற்றி நான் நீண்ட காலமாக பேச விரும்பினேன். இனம், மதம், ஜாதி, வேறுபாடுகள் இல்லாத ஒரே விஷயம் ரத்தம். குறைந்த பட்சம் இந்த ஒரு நல்ல குணத்தையாவது நாம் இரத்தத்தில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். இரத்த தானம் செய்வதற்கான செயலியை ஆரம்பித்துள்ளேன். நான் அறிமுகப்படுத்திய செயலி மூலம் 6000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் ரத்த தானம் செய்துள்ளனர். இதை சாத்தியமாக்கிய எனது வழிகாட்டிகள், குழு உறுப்பினர்கள் மற்றும் எனது ரசிகர்களுக்கு நன்றி.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்