UA-201587855-1 Tamil369news "காசேதான் கடவுளடா" - அஜித்தின் 'துணிவு' பட இரண்டாவது பாடல் நாளை வெளியீடு

"காசேதான் கடவுளடா" - அஜித்தின் 'துணிவு' பட இரண்டாவது பாடல் நாளை வெளியீடு

அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘துணிவு’ திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழ் திரைத்துறையின் உச்ச நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித். கடைசியாக இவரது நடிப்பில் ‘வலிமை’ வெளியாகி இருந்தது. இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் அவர் மீண்டும் ‘துணிவு’ படத்தில் நடித்துள்ளார். ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் மூன்றாவது திரைப்படம் இது. இந்தப் படத்தை ஜீ ஸ்டூடியோஸ் சார்பில் போனி கபூர் தயாரித்துள்ளார். இந்தப் படத்திற்கு இசை அமைத்துள்ளார் ஜிப்ரான். இந்தப் படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘Chilla Chilla’ சில நாட்கள் முன் வெளியானது. இந்தப் பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார். பாடல் வரிகளை 'காக்கா கதை கேட்டிருக்கேன்' பாடல் புகழ் வைஷாக் எழுதியுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை