UA-201587855-1 Tamil369news FIFA WC 2022 | அரை இறுதியில் இன்று பலப்பரீட்சை - மாயாஜாலம் நிகழ்த்தப்போவது மெஸ்ஸியா, மோட்ரிச்சா?

FIFA WC 2022 | அரை இறுதியில் இன்று பலப்பரீட்சை - மாயாஜாலம் நிகழ்த்தப்போவது மெஸ்ஸியா, மோட்ரிச்சா?

தோகா: கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் அரை இறுதியில் இன்று நள்ளிரவு 12.30 மணி அளவில் தோகாவில் உள்ள லுசைல் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் லயோனல் மெஸ்ஸி அங்கம் வகிக்கும் அர்ஜெண்டினா அணி, லூக்கா மோட்ரிச்சின் குரோஷியாவை எதிர்த்து விளையாடுகிறது.

2018-ம் ஆண்டு ரஷ்ய உலகக் கோப்பை கால்பந்து தொடரில் 2-வது இடம் பிடித்த குரோஷியா இம்முறை கத்தாரில் கோப்பையை வெல்லக்கூடிய பிரதான அணிகளுள் ஒன்றாக கருதப்பட்ட பிரேசில் அணியை கால் இறுதி சுற்றில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் வீழ்த்தியது. கூடுதல் நேரத்தில் ஒரு கோல் வாங்கிய போதிலும் கடைசி 3 நிமிடங்கள் மட்டுமே இருந்த நிலையில் பதில் கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்தது. தொடர்ந்து பெனால்டி ஷூட் அவுட்டில்4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 5 முறை சாம்பியனான பிரேசிலை தொடரில் இருந்து வெளியேற்றி இருந்தது குரோஷியா அணி.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை