UA-201587855-1 Tamil369news IND vs SL | கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இன்று மோதல் - தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி

IND vs SL | கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இன்று மோதல் - தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி

திருவனந்தபுரம்: இந்தியா – இலங்கை அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் வெற்றி பெற்று ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரை முழுமையாக 3-0 என கைப்பற்றுவதில் இந்திய அணி தீவிர முனைப்புடன் செயல்படக்கூடும்.

இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள்கிரிக்கெட் போட்டித் தொடரில் குவாஹாட்டியில் நடைபெற்ற முதல்ஆட்டத்தில் 67 ரன்கள் வித்தியாசத்திலும், கொல்கத்தாவில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் 4 விக்கெட்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்றது. இதனால் தொடரை இந்தியா 2-0 என தன்வசப்படுத்தியது. இந்நிலையில் கடைசி ஆட்டத்தில் இரு அணிகளும் இன்றுதிருவனந்தபுரத்தில் மோதுகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை