சென்னை: மாநிலங்களுக்கு இடையிலான 84-வது இளையோர் மற்றும் ஜூனியர் தேசிய சாம்பியன்ஷிப் டேபிள் டென்னிஸ் போட்டியில் இன்று அணிகளிடையிலான ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. இந்தப் போட்டி சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது.
கடந்த 5 நாட்களாக நடைபெற்று வரும் இப்போட்டியில் இன்று அணிகளிடையிலான ஆட்டங்கள் தொடங்க உள்ளன. இந்தப் போட்டியில் கடந்த 2 ஆண்டுகளாக அணிகளிடையிலான ஆட்டங்கள் நடைபெறவில்லை. இந்த ஆண்டு மீண்டும் அணிகளிடையிலான ஆட்டங்கள் அரங்கேறுகின்றன. அணிகள் பிரிவில் மொத்தம் 27 அணிகள் களமிறங்கவுள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்