துபாய்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி (டபிள்யூடிசி) வரும் ஜூன் 7 முதல்11-ம் தேதி வரை தெற்கு லண்டனில் உள்ள தி ஓவல் மைதானத்தில் நடைபெறும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.
இரு வருடங்கள் இடைவெளியில் நடத்தப்படும் இந்த சாம்பியன்ஷிப்பில் முதல் சீசனில் இந்தியா – நியூஸிலாந்து அணிகள் மோதின. இதில் நியூஸிலாந்து பட்டம் வென்றிருந்தது. இறுதிப் போட்டிக்கான இரு அணிகள் இன்னும் முடிவாகவில்லை. தற்போதைய நிலையில் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் ஆஸ்திரேலியா முதலிடமும், இந்தியா 2-வது இடமும் வகிக்கின்றன. இந்த இரு அணிகளும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மோத உள்ளன. இதன் முடிவை பொறுத்தே சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் அணிகள் தெரியவரும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்