UA-201587855-1 Tamil369news நியூஸி.க்கு எதிரான டெஸ்டில் அதிரடி ஆட்டம் - 9 இன்னிங்ஸில் 800 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்தார் ஹாரி புரூக்

நியூஸி.க்கு எதிரான டெஸ்டில் அதிரடி ஆட்டம் - 9 இன்னிங்ஸில் 800 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்தார் ஹாரி புரூக்

நியூஸிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டத்தில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 315 ரன்கள் குவித்தது. ஹாரி புரூக், ஜோ ரூட் சதம் விளாசினர்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மவுண்ட் மவுங்கனுயில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 267 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று வெலிங்டன் நகரில் தொடங்கியது. டாஸ் வென்ற நியூஸிலாந்து பீல்டிங்கை தேர்வு செய்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை