UA-201587855-1 Tamil369news இலங்கைக்கு எதிரான 2-வது போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி: டெஸ்ட் தொடரை 2-0 என வென்றது நியூஸிலாந்து அணி

இலங்கைக்கு எதிரான 2-வது போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி: டெஸ்ட் தொடரை 2-0 என வென்றது நியூஸிலாந்து அணி

வெலிங்டன்: இலங்கை அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என முழுமையாக வென்று கோப்பையை கைப்பற்றியது.

வெலிங்டனில் நடைபெற்று வந்த 2-வது டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 580 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. கேன் வில்லியம்சன் 215, ஹென்றி நிக்கோல்ஸ் 200 ரன்கள் விளாசினர். தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 66.5 ஓவர்களில் 164 ரன்களுக்கு ஆட்டமிழந்து பாலோ-ஆன் ஆனது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை