UA-201587855-1 Tamil369news ஆர்ஆர்ஆர் படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல், ‘தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப்படம் என இந்தியாவுக்கு 2 ஆஸ்கர் விருதுகள்

ஆர்ஆர்ஆர் படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல், ‘தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப்படம் என இந்தியாவுக்கு 2 ஆஸ்கர் விருதுகள்

லாஸ் ஏஞ்சல்ஸ்: ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கும், யானைகளை பராமரிக்கும் தமிழகத்தின் முதுமலை தம்பதிகள் பற்றிய ‘தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்’ என்ற ஆவணக் குறும்படத்துக்கும் ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. இந்தியாவுக்கு 2 ஆஸ்கர் விருதுகளை பெற்றுத் தந்துள்ள கலைஞர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

உலக அளவில் திரைத்துறையில் வழங்கப்படும் உயரிய விருதாக கருதப்படுவது ஆஸ்கர். இந்நிலையில், 95-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரின் டால்பி ஸ்டுடியோவில் நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில், சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், துணை நடிகர், நடிகை உட்பட பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை